Header Ads

Header ADS

உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!

1 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 
சங்கீதம் 8:1

2 பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். 
சங்கீதம் 8:2

3 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 
சங்கீதம் 8:3

4 மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 
சங்கீதம் 8:4

5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர், மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். 
சங்கீதம் 8:5

6 உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 
சங்கீதம் 8:6

7 ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், 
சங்கீதம் 8:7

8 ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 
சங்கீதம் 8:8

9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! 
சங்கீதம் 8:9

No comments

ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.  சங்கீதம் 20:1 2 அவர் பரிசுத்த ஸ்த...

Powered by Blogger.