Header Ads

Header ADS

துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான், அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.

1 கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? 
சங்கீதம் 10:1

2 துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான், அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். 
சங்கீதம் 10:2

3 துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமை பாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான். 
சங்கீதம் 10:3

4 துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான், அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே. 
சங்கீதம் 10:4

5 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள், உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது, தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான். 
சங்கீதம் 10:5

6 நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். 
சங்கீதம் 10:6

7 அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது, அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. 
சங்கீதம் 10:7

8 கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான், திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது. 
சங்கீதம் 10:8

9 தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான், ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். 
சங்கீதம் 10:9

10 திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக் கிடக்கிறான். 
சங்கீதம் 10:10

11 தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான். 
சங்கீதம் 10:11

12 கர்த்தாவே, எழுந்தருளும், தேவனே, உம்முடைய கையை உயர்த்தும், ஏழைகளை மறவாதேயும். 
சங்கீதம் 10:12

13 துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக் கொள்வானேன்? 
சங்கீதம் 10:13

14 அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே, நீர் பதிலளிப்பீர், ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான், திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. 
சங்கீதம் 10:14

15 துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும், அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும். 
சங்கீதம் 10:15

16 கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார், புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்து போவார்கள். 
சங்கீதம் 10:16

17 கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர், அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர். 
சங்கீதம் 10:17

18 மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக் கேட்டருளுவீர். 
சங்கீதம் 10:18

No comments

ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.  சங்கீதம் 20:1 2 அவர் பரிசுத்த ஸ்த...

Powered by Blogger.