Header Ads

Header ADS

அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்?

1 நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள். 
சங்கீதம் 11:1

2 இதோ, துன்மார்க்கர் வில்லைவளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். 
சங்கீதம் 11:2

3 அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்? 
சங்கீதம் 11:3

4 கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார், கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது, அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது. 
சங்கீதம் 11:4

5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார், துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. 
சங்கீதம் 11:5

6 துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார், அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. 
சங்கீதம் 11:6

7 கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார், அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது. 
சங்கீதம் 11:7

No comments

ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.  சங்கீதம் 20:1 2 அவர் பரிசுத்த ஸ்த...

Powered by Blogger.