Header Ads

Header ADS

நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக் கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள், நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 
சங்கீதம் 14:1

2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். 
சங்கீதம் 14:2

3 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. 
சங்கீதம் 14:3

4 அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவுஇல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே, அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை. 
சங்கீதம் 14:4

5 அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள், தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே. 
சங்கீதம் 14:5

6 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள். 
சங்கீதம் 14:6

7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக, கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும். 
சங்கீதம் 14:7

No comments

ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.  சங்கீதம் 20:1 2 அவர் பரிசுத்த ஸ்த...

Powered by Blogger.