Header Ads

Header ADS

தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன்.

1 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். 
சங்கீதம் 16:1

2 என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல், 
சங்கீதம் 16:2

3 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய். 
சங்கீதம் 16:3

4 அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும், அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன். 
சங்கீதம் 16:4

5 கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர், என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். 
சங்கீதம் 16:5

6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது, ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு. 
சங்கீதம் 16:6

7 எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன், இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். 
சங்கீதம் 16:7

8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. 
சங்கீதம் 16:8

9 ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். 
சங்கீதம் 16:9

10 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். 
சங்கீதம் 16:10

11 ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர், உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்தியபேரின்பமும் உண்டு. 
சங்கீதம் 16:11

No comments

ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.  சங்கீதம் 20:1 2 அவர் பரிசுத்த ஸ்த...

Powered by Blogger.