Header Ads

Header ADS

கர்த்தர் நல்லவர்

1 கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். 
சங்கீதம் 6:1

2 என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன், என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது. 
சங்கீதம் 6:2

3 என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது, கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர். 
சங்கீதம் 6:3

4 திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும், உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும். 
சங்கீதம் 6:4

5 மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 
சங்கீதம் 6:5

6 என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன், இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். 
சங்கீதம் 6:6

7 துயரத்தினால் என் கண்கள் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர்நிமித்தமும் மங்கிப்போயிற்று. 
சங்கீதம் 6:7

8 அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள், கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். 
சங்கீதம் 6:8

9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக்கேட்டார், கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். 
சங்கீதம் 6:9

10 என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள், அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள். 
சங்கீதம் 6:10

No comments

ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.  சங்கீதம் 20:1 2 அவர் பரிசுத்த ஸ்த...

Powered by Blogger.