கர்த்தருடைய நாமம்
1 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
சங்கீதம் 7:1
2 சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப்பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும்.
சங்கீதம் 7:2
3 என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும்,
சங்கீதம் 7:3
4 என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால்,
சங்கீதம் 7:4
5 பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன். (சேலா.)
சங்கீதம் 7:5
6 கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும், நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே.
சங்கீதம் 7:6
7 ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும், அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும்.
சங்கீதம் 7:7
8 கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார், கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும்.
சங்கீதம் 7:8
9 துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும், நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக, நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளந்திரியங்களையும் சோதித்தறிகிறவர்.
சங்கீதம் 7:9
10 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது.
சங்கீதம் 7:10
11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி, அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன்.
சங்கீதம் 7:11
12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார், அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார்.
சங்கீதம் 7:12
13 அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார், தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார்.
சங்கீதம் 7:13
14 இதோ, அவன் அக்கிரமத்தைப்பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான், தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான்.
சங்கீதம் 7:14
15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான், தான் வெட்டின குழியில் தானே விழுந்தான்.
சங்கீதம் 7:15
16 அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும்.
சங்கீதம் 7:16
17 நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம் பண்ணுவேன்.
சங்கீதம் 7:17
No comments