Header Ads

Header ADS

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

1 கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். 
சங்கீதம் 3:1

2 தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.) 
சங்கீதம் 3:2

3 ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். 
சங்கீதம் 3:3

4 நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.) 
சங்கீதம் 3:4

5 நான் படுத்து நித்திரை செய்தேன், விழித்துக்கொண்டேன், கர்த்தர் என்னைத் தாங்குகிறார். 
சங்கீதம் 3:5

6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம் பேருக்கும் நான் பயப்படேன். 
சங்கீதம் 3:6

7 கர்த்தாவே, எழுந்தருளும், என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப் போட்டீர். 
சங்கீதம் 3:7

8 இரட்சிப்பு கர்த்தருடையது, தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.) 
சங்கீதம் 3:8

No comments

ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக, யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.  சங்கீதம் 20:1 2 அவர் பரிசுத்த ஸ்த...

Powered by Blogger.